போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கிய மியான்மர் ராணுவம்...!வெளியான புகைப்படம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதால், போராட்டக்காரர்களை அவர்கள் கடுமையாக தாக்கி வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரி-1 முதல் ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மக்கள் போராடி வருவதால், ராணுவத்தினர் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கி வருகிறார்கள். இது குறித்து மியான்மரில் உள்ள ஏ.ஏ.பி.பி. என்ற மனித உரிமைகள் அமைப்பு கூறியிருப்பதாவது, "இதுவரை ராணுவத்தினரால் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்களால் சுமார் 737 பேர் பரிதாமாக கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினரின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பயந்து, 3,229 பேர் மியான்மரை விட்டு வெளியேறி உள்ளார்கள்.
மேலும் ராணுவத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை கைது செய்து, கடுமையான தாக்குதல்களையும், சித்ரவதைகளையும் செய்து வருகின்றனர் மியான்மர் ராணுவத்தினர். இந்தநிலையில் மியான்மர் ராணுவத்தின் செய்தி நிறுவனம் அண்மையில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 6 நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள 4 ஆண்கள் மற்றும் 2 இளம்பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். முகத்தில் உள்ள ரத்தக்காயங்களும் அவர்கள் செய்த சித்திரவதைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ராணுவத்தை எதிர்த்து போராடினால் இதுதான் நிலைமை என்பதை எச்சரிப்பது போல், ராணுவ செய்தி நிறுவனம் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
#Myanmar’s military screened the pictures on the right - young women they had detained, bearing harrowing signs of abuse - on the nightly news today. They fact they felt free to show these images - and wanted to - speaks volumes. #WhatsHappeningInMyanmar pic.twitter.com/lt5CeNc06B
— Poppy McPherson (@poppymcp) April 18, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments