என் மனைவி குங்குமம் வைச்சிக்க விரும்பல... வளையல் போட்டுக்க மறுக்கிறா???அதனால விவாகரத்து கொடுத்துடுங்க...
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் பெண்ணிற்கு அழகு இதுதான் என ஒவ்வொரு மதக் கலாச்சாரமும் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதை மீறும்போது கலாச்சாரத்தையே அவமதிப்பதாக நினைத்துக் கொள்ளும் மனப்பான்மையும் இந்தச் சமூகத்தில் பலரிடம் காணப்படுகிறது. அப்படி ஒரு கணவன் என் மனைவி குங்குமம் வைத்துக் கொள்ள மறுக்கிறாள். வளையல் போட்டுக் கொள்ள மறுக்கிறாள். அதனால் எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் என நீதிமன்றத்தை நாடியிருக்கும் விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கெளஹாத்தியைச் சேர்ந்த ஒரு இளைஞர் எனது மனைவியை நான் இந்து முறைப்படித்தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அவர் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ள மறுக்கிறாள். வளையல் அணியவும் மறுப்பு தெரிவிக்கிறாள். இச்செயல் என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் அவமானப் படுத்தும் செயலாக இருக்கிறது என குடும்பவியல் நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்து இருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது சரியான காரணம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கின்றனர். ஆனால் விவகாரம் அதோடு முடிந்துவிட வில்லை. அந்த இளைஞர் கௌஹாத்தி உயர்நீதி மன்றத்தின் கதவுகளைத் தற்போது தட்டியிருக்கிறார்.
அவர் தொடுத்த வழக்கில் இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல்தான் இந்துக் கலாச்சாரங்களைப் பின்பற்ற அவர் மறுப்பு தெரிவிக்கிறார். இந்துக் கலாச்சார முறைப்படி குங்குமம் மற்றும் வளையலை அணியாமல் இருக்கும்போது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு திருமணம் ஆகாத பெண் என்றே நினைக்க தோன்றும். வெளியில் திருமணம் ஆகாதவள் எனக் காட்டிக் கொள்வதற்காகத் தான் என் மனைவி வளையல் அணிய மறுக்கிறாள் என்று வழக்குத் தொடுத்து இருக்கிறார். இதுகூட பரவாயில்லை. அந்த இளைஞரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப் பட்டுள்ள இன்னொரு கருத்துத்தான் தற்போது தூக்கி வாரிப்போடும் வகையறாவாக இருக்கிறது.
இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் கணவன் வீட்டிற்கு சென்றவுடன் இந்து கலாச்சாரங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். அப்படி செய்யத் தவறினால், அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக தங்களை காட்டிக்கொள்ள முற்படுகிறார்கள் என்று அர்த்தம் எனவும் நீதிமன்றத்தில் வாதாடி இருக்கின்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதன் தீர்ப்பை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout