கன்னடர்கள்தான் கர்நாடகாவை ஆளவேண்டும் என்று கூறினாரா பிரகாஷ்ராஜ்?

  • IndiaGlitz, [Tuesday,January 02 2018]

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆளவேண்டும் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தது. இதனால் பிரகாஷ்ராஜூக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தல்களில் தோற்கடிப்போம் என்றுதான் பெங்களூரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாக பிரகாஷ்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

மேலும் தன்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து தனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்து இருக்கீன்றீர்கள்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த விளக்கத்திற்கும் சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

More News

'தளபதி 62' படத்தில் மீண்டும் 'மெர்சல் மேஜிக்!

'தளபதி 62' படத்திலும் தொடரும் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் 'தளபதி 62' படத்தில் இணைவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி சந்தித்த முதல் நபர்

ரஜினிகாந்த கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் அறிவிப்பை தெளிவாக அறிவித்ததோடு, அதற்கான முன்னேற்பாடுகளையும் தீவிரமாக செய்து வரும் நிலையில் நேற்று அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார்

அரசியல் அறிவிப்புக்கு பின் இணையதளம், செயலியை தொடங்கிய ரஜினிகாந்த்

அரசியல் அறிவிப்புக்கு பின்னர் நேற்று தனது வீட்டின் முன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய ரஜினிகாந்த், நேற்று புதிய இணையதளம் மற்றும் செயலி குறித்த அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ளார்.

சூர்யா 36' படத்தின் புதிய அறிவிப்பு

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு?

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 179 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.