பாக்யராஜ் அணியின் 3 வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடியா?

  • IndiaGlitz, [Tuesday,June 11 2019]

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. இரண்டு அணிகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் மொத்தம் 29 பதவிகளுக்கு 79 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் பாக்யராஜ் அணியை சேர்ந்த ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மற்றும் விமல் ஆகிய மூன்று பேர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவர்கள் மூவரும் சந்தா தொகையை முறையாக கட்டாததால் இவர்களது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது

ஆனால் இந்த தகவலை ரமேஷ் கண்ணா மறுத்துள்ளார். தான் நடிகர் சங்கத்தில் 48 வருடங்களாக உறுப்பினராக இருப்பதாகவும் இதுவரை சரியாக சந்தா கட்டியிருப்பதாகவும், தன்னுடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவலில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார். வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது மூவரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் உண்மைதானா? அல்லது வதந்தியா? என்பது தெரிய வரும்

More News

வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்த மற்றொரு இயக்குனர்!

ஒரு திரைப்படத்திற்கு இயக்குனர் என்பவர் முதுகெலும்பு போன்றவர். அவர் இல்லாமல் ஒரு படம் உருவாக முடியாது. எனவேதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி முதல் முன்னணி நடிகர்கள்

பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி அடிப்போம்: நாடக நடிகர் ஆவேசம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

வடிவேலுக்கு எதிராக திரளும் இயக்குனர்கள்

வடிவேலு நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தின் நேசமணி கேரக்டர் சமீபத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆகி அவரது புகழ் பரவிய நிலையில், அவர் அளித்த ஒரே ஒரு பேட்டியில்

கொலையுதிர்க்காலம் படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலட்டி இயக்கிய 'கொலையுதிர் காலம்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு: 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித், சோழமன்னர் ராஜராஜ சோழனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்