பாக்யராஜ் அணியின் 3 வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடியா?

  • IndiaGlitz, [Tuesday,June 11 2019]

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. இரண்டு அணிகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் மொத்தம் 29 பதவிகளுக்கு 79 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் பாக்யராஜ் அணியை சேர்ந்த ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மற்றும் விமல் ஆகிய மூன்று பேர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவர்கள் மூவரும் சந்தா தொகையை முறையாக கட்டாததால் இவர்களது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது

ஆனால் இந்த தகவலை ரமேஷ் கண்ணா மறுத்துள்ளார். தான் நடிகர் சங்கத்தில் 48 வருடங்களாக உறுப்பினராக இருப்பதாகவும் இதுவரை சரியாக சந்தா கட்டியிருப்பதாகவும், தன்னுடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவலில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார். வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது மூவரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் உண்மைதானா? அல்லது வதந்தியா? என்பது தெரிய வரும்