அடுத்த படம் பான் - வேர்ல்டு, கதை இதுதான்: லெஜண்ட் சரவணன் கூறிய சூப்பர் தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,July 27 2022]

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அவர்கள் நடித்துள்ள ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் சென்று படக்குழுவினர் இந்த படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கேரளாவில் நடந்த புரமோஷனின் போது செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சுவராசியமாக சரவணன் பதில் அளித்தார்.

அப்போது அடுத்த படத்திலும் நீங்கள் சூப்பர் ஹீரோவாக நடிப்ப்பீர்களா? என்று கேட்ட போது கண்டிப்பாக அடுத்த படத்திலும் சூப்பர் ஹீரோவாக நடிப்பேன் என்றும், அதே நேரத்தில் அடுத்த படம் சர்வதேச அளவில் எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

’தி லெஜண்ட்’ திரைப்படத்தை பான் - இந்தியா திரைப்படமாக வெளியிடும் லெஜண்ட் சரவணன் அடுத்ததாக பான் - வேர்ல்டு திரைப்படமாக எடுக்க இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி தற்போது கோலிவுட் திரையுலகில் எழுந்துள்ளது.

More News

தனுஷ் பிறந்த நாள்: ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு

நாளை தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர்.

அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்: தம்பியை வரவேற்ற கமல்ஹாசன்

அன்றைய சரித்திரம் மீண்டும் அதை நினைவுறுத்துவோம், தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்கிறேன் என தனது அடுத்த பட அறிவிப்பை கமல்ஹாஸன் அறிவித்துள்ளார்.

'இந்தியன் 2' படத்திற்காக களமிறங்கிய கமல்: எங்கே சென்றார் தெரியுமா?

 கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கமல்ஹாசன் களத்தில் இறங்கி உள்ளதாக

சென்னை திரும்பியதும் அஜித் சென்றது எங்கே தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

 நடிகர் அஜித் கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்று இருந்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

நாளை தனுஷ் பிறந்த நாள்: செம ட்ரீட் கொடுக்கும் 'வாத்தி' படக்குழு!

 தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.