உண்மையை சொன்னதற்கு மன்னிப்பு கேட்கனுமா, என் பெயர் ராகுல் "சாவர்க்கர்" இல்லை, ராகுல் "காந்தி"..!
Send us your feedback to audioarticles@vaarta.com
"நாட்டில் நடந்து கொண்டிருக்கும் உண்மைகளைச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி" என்று இன்று மோடி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்தும் பேரணியில் ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் காந்தி ஜார்கண்டில் தேர்தல் பரப்புரைக்காக பேசும் போது, மோடி மேக் இன் இந்தியா திட்டம் என்று அறிவித்தார் ஆனால் ரேப் இன் இந்தியாவாகத்தான் நம் நாடு இருக்கிறது. பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு அதை எதை பற்றியும் கவலைப்படாமல் மதங்களைக் கொண்டு நம்மை பிரிக்கும் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று கூறினார்.
நேற்று பாராளுமன்றத்தில் பாஜாக எம்பிக்கள், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கிறது என்று சொன்னதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக ரேப் இன் இந்தியா என்று சொன்னதை தவறு என்று ராகுல் காந்தி ஒப்புக்கொள்ள வேண்டும் என்றனர்.
"தேஷ் பச்சோ" தேசத்தை காப்போம் என்ற பெயரில் காங்கிரஸ் பேரணி ஒன்றை நடத்துகிறது. அதற்கான தொடக்க விழாவில் பேசிய ராகுல் காந்தி "நாட்டில் நடந்து கொண்டிருக்கும் உண்மைகளைச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. என் பெயர் ராகுல் சாவர்க்கர் இல்லை ராகுல் காந்தி" என்று கூறினார். மேலும் மோடியும் அவரது உதவியாளர் அமித்ஷாவும் தான் நாட்டை இப்படி ஒரு பரிதாப நிலைக்கு கொண்டு வந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
"Insulting this nation over again and again is my birthright and I shall do it." - Mr Rahul Gandhi.#RahulGandhi #GeneralElection2019#FridayFeeling pic.twitter.com/yqYnf1WePA
— Rahul Dharmendra Jadhav (@RahulDJadhav301) December 13, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
arul sudha
Contact at support@indiaglitz.com
Comments