இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான் தான்: 1995ல் வெளியான படம் குறித்து 'கோட்' பட நடிகர்..!

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான்தான் என்று ‘கோட்’ படத்தில் நடித்த நடிகர் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தனது படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் அதில் கடந்த 1990களில் பல வெற்றி படங்கள் கொடுத்த பிரசாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான்தான் என்றும், 1995ல் வெளியான ‘ஆணழகன்’ படத்தில் உள்ள ’எலே மச்சி’ என்ற பாடலில் சில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை செய்தோம் என்றும் அப்போதே அதற்கு நிறைய செலவானது என்று தெரிவித்துள்ளார். ’ஆணழகன்’ படம் தான் இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வந்த படம் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

கடந்த 1995ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவான ’ஆணழகன்’ படத்தின் கதை '4 பேச்சிலர்கள் வீடு கிடைக்காமல் திண்டாடும் நிலையில், யாரும் பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்காததால் பிரசாந்த் பெண் வேடம் போட்டு தனது நண்பர் மனைவி போல் நடிப்பார். அதன்பின் வாடகைக்கு வீடு கிடைத்தவுடன் ஏற்படும் குழப்பங்கள் பிரச்சனைகள் என்னென்ன என்பதை காமெடியாக கூறப்பட்டிருக்கும் என்பதும் இந்த படம் அப்போதே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒரு பாடலில்தான் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றதை பார்த்து அப்போதே ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர் என்றும் அந்த காட்சியைத் தான் தற்போது பிரசாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' 'இந்தியன் 3' பார்க்க வாய்ப்பு.. வேற லெவலில் யோசித்த ஷங்கர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உருவாகி இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து

இந்த வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது: மம்முட்டி, கமல், விஜய் குறித்து கேரள அமைச்சர்..!

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த திரைப்படம் திடீரென தற்போது சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் மம்முட்டிக்கு ஆதரவாக கேரள அமைச்சர் 'இந்த வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது'

'உயிர் தமிழுக்கு' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. இயக்குனர் அமீர் வெளியிட்ட அறிக்கை..!

அமீர் நடிப்பில் ஆதம்பாவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்றும் ஓரளவு சுமாரான வசூல் செய்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்பார்த்தது நடந்துவிட்டது.. 'சூர்யா 44' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

இந்தியா - பப்புவா நியூ கினியா இணையும் படத்தை தயாரிக்கும் பா ரஞ்சித்.. டைட்டில் -ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

முதல் முறையாக இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய இரு நாடுகளின் திரையுலகில் இணையும் படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்