இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான் தான்: 1995ல் வெளியான படம் குறித்து 'கோட்' பட நடிகர்..!

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான்தான் என்று ‘கோட்’ படத்தில் நடித்த நடிகர் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தனது படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் அதில் கடந்த 1990களில் பல வெற்றி படங்கள் கொடுத்த பிரசாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான்தான் என்றும், 1995ல் வெளியான ‘ஆணழகன்’ படத்தில் உள்ள ’எலே மச்சி’ என்ற பாடலில் சில கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை செய்தோம் என்றும் அப்போதே அதற்கு நிறைய செலவானது என்று தெரிவித்துள்ளார். ’ஆணழகன்’ படம் தான் இந்தியாவின் முதல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வந்த படம் என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

கடந்த 1995ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவான ’ஆணழகன்’ படத்தின் கதை '4 பேச்சிலர்கள் வீடு கிடைக்காமல் திண்டாடும் நிலையில், யாரும் பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்காததால் பிரசாந்த் பெண் வேடம் போட்டு தனது நண்பர் மனைவி போல் நடிப்பார். அதன்பின் வாடகைக்கு வீடு கிடைத்தவுடன் ஏற்படும் குழப்பங்கள் பிரச்சனைகள் என்னென்ன என்பதை காமெடியாக கூறப்பட்டிருக்கும் என்பதும் இந்த படம் அப்போதே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒரு பாடலில்தான் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றதை பார்த்து அப்போதே ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர் என்றும் அந்த காட்சியைத் தான் தற்போது பிரசாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.