என் இதயம் மெரீனாவில்தான் உள்ளது. மருத்துவமனையில் இருந்து ராகவா லாரன்ஸ் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்பட பல வசதிகளை தனது சொந்த செலவில் செய்து கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் நடிகர் ராகவா லாரன்சுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய போதிலும் மீண்டும் மெரீனாவின் போராட்டக்களத்திற்கு வந்து தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் போராட்ட களத்தில் இணைந்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் காய்ச்சல் மற்றும் கழுத்துவலி காரணமாக ராகவா லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து கொண்டே ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இப்போது உங்களுடன் என்னால் மெரினாவில் இருக்க முடியவில்லை. கழுத்துவலி மற்றும் காய்ச்சல் காரணமாக, என்னால் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் போய்விட்டது. எனது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில், இன்று மீண்டும் கண்டிப்பாக மெரினா வருவேன். நான் இப்போது மருத்துவமனையில் இருந்தாலும், எனது இதயம் மெரினாவில் உங்களுடன்தான் இருக்கிறது'' என்று உணர்ச்சி பெருக்குடன் கூறியுள்ளார்.,
ராகவா லாரன்ஸ் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments