'சர்கார்' படத்தால் நனவாகிய நான்கு கனவுகள்: வரலட்சுமி

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் 'சர்கார்' படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாகவும் இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தின் வியாபாரம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை வரலட்சுமி தனது அனுபவங்களை வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். நான் திரையுலகில் வரும்போது எனக்கு நான்கு கனவுகள் இருந்தது. ஒன்று விஜய் படத்தில் நடிப்பது, இரண்டாவது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது, மூன்றாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிப்பது, நான்காவது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது. 'சர்கார்' படத்தில் நடித்ததால் எனது நான்கு கனவுகளும் நனவாகிவிட்டது என்று வரலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் முருகதாஸ் மிகவும் அமைதியாக இருந்தாலும் அன்பு கலந்த கண்டிப்புடன் வேலை வாங்கிவிடுவார். அவரைப்போல் ஒரு இனிமையான இயக்குனரை நான் பார்த்ததில்லை. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி' என்று கூறிய வரலட்சுமி, தீபாவளிக்கு வெளிவரும் இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள், திருட்டி டிவிடியில் பார்க்காதீர்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார்.