10 வருடங்களுக்கு பின் இதுதான் ஃபர்ஸ்ட்.. ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பத்து வருடங்களுக்கு பின்னர் நேரடி தெலுங்கு படத்தில் இசையமைப்பதாக கூறியுள்ள நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் அந்த படத்தின் சிங்கிள் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என்பது தெரிந்ததே. இந்நிலையில் அவர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றுக்கு இசையமைத்து வருகிறார். Ek Dum Ek Dum என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ரவிதேஜா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடலின் வீடியோவை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் உருவான இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார் என்பதும், அஜய் கிருஷ்ணா பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
My first single in straight Telugu after 10 years … let’s goooo 🕺💃🏻#TigerNageswaraRao First Single #EkDumEkDum out now ❤️🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) September 5, 2023
- https://t.co/bGfKEWCMyb
Telugu
🎤 @anuragkulkarni_
✍️ @bhaskarabhatla
Hindi
🎤 @shahidmaliya
✍️ @PrashantIngole1
Tamil
🎤 #AjayKrishna
✍️…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments