close
Choose your channels

ரஜினிதான் என் முதல் சாய்ஸ். மோகன்லால் இயக்குனர்

Tuesday, January 31, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன்லால்-மீனா நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் இதே ஜோடி நடித்த 'முன்திருவல்லிகள் தளிர்க்கும்போல்' என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் ஜிபு ஜாக்கப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

ஜிபி ஜாக்கப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடித்த 'முன்திருவல்லிகள் தளிர்க்கும்போல்' திரைப்படம் கடந்த 20ஆம் தேதி வெளிவந்து ரூ.20 கோடி வசூலை நெருங்கியுள்ளது. 'த்ரிஷ்யம்' போலவே இந்த படமும் இந்தியாவின் பல மொழிகளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தை தமிழில் தானே ரீமேக் செய்ய இயக்குனர் ஜிபு ஜாக்கப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் மோகன்லாலின் கேரக்டருக்கு ரஜினிதான் தனது முதல் சாய்ஸ் என்றும் தெரிவித்துள்ளார்.

'2.0' படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் அவர் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment