என் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்

சமீபத்தில் வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நடந்து அதன் பின்னர் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவர் குடிகாரர் என்றும் அவர் மறுவாழ்வு மையத்தில் சில மாதங்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து இருந்த வனிதா திருமண நாளில் கூட பீட்டர் பால் குடிக்கவில்லை என்றும் அவர் ஒயிட் ஒயின் மட்டும்தான் குடித்தார் என்றும் எனவே அவர் குடிகாரர் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் வனிதாவின் இந்த கருத்துக்கு பீட்டர்பால் மகன் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது அப்பாவுக்கு குடிப்பழக்கம் இல்லை என்று வனிதா சொல்வது முற்றிலும் பொய் என்றும் எனது தந்தை குடிப்பழக்கம் காரணமாக மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும், ஆனால் மறுவாழ்வு மையத்தில் இருந்து அவர் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் தனக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்த பெண்ணின் வயிற்றில் தனது குழந்தை வளர்வதாகவும் எனது அப்பா எனது அம்மாவிடம் கூறியதாகவும் அதன் பின்னரே அம்மா அப்பாவுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் பீட்டர் பால் மகன் தெரிவித்துள்ளார். 

மேலும் அப்பாவுக்கும் வனிதாவுக்கும் திருமணம் என்று கேள்விப்பட்டபோது எங்களுக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும் ஏனெனில் எனது அப்பாவுக்கு புதிதாக பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது புதிது அல்ல என்றும் அவர் எங்கு வேலை பார்த்தாலும் வேலை செய்யும் இடத்தில் ஏதாவது ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருப்பார் என்றும் பீட்டர் மகன் கூறியுள்ளார்.

More News

ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு... சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ் என்ன தெரியுமா??? விஞ்ஞானிகள் தகவல்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவில் பன்றிகளிடம் ஒரு புதிய தொற்று பரவி வருவதாகப் பரபரப்பு ஏற்பட்டது

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரை உலக பிரபலங்கள் என பலரையும் பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது: பட்டாசு வெடித்து கொண்டாடிய சாத்தான்குளம் பொதுமக்கள்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி கைவசம் கொண்ட பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்து வருவதை பார்த்து வருகிறோம்

சாத்தான்குளம் வழக்கில் மேலும் இருவர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட

சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகுகணேஷ் கைது: கொலை வழக்காக பதிவு

தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர்களின் லாக்கப் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது