எங்கள் வீட்டு ஆண்தேவதை இவர்தான்: பிக்பாஸ் சுஜா வருனே
Send us your feedback to audioarticles@vaarta.com
சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கிய 'ஆண் தேவதை' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. பொதுவாக பெண்களைத்தான் தேவதை என அழைப்பதுண்டு. ஆனால் ஆண்களிலும் பொறுமை, அர்ப்பணிப்பு உணர்வு, தியாக மனப்பான்மை போன்ற குணமுள்ள ஒரு ஆண் கேரக்டர் குறித்த படம் என்பதால் இந்த படத்திற்கு 'ஆண் தேவதை' என பெயரிடப்பட்டுள்ளது
இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் சுஜா வருனே, தன்னுடைய குடும்பத்திலும் ஒரு ஆண் தேவதை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, என் குடும்பத்தின் ஆண் தேவதை என்பவர் ஆறுமுகம் என்பவர் தான். இவர் என்னுடைய குடும்பத்தின் ரத்த உறவு இல்லை என்றாலும் என் அம்மாவை சிறுவயது முதலே தத்தெடுத்து வளர்த்து அவருக்கு திருமணம் செய்து வைத்தவர். பின்னர் நாங்கள் பிறந்த பின்னர் என் தந்தை எங்களை விட்டு சென்றவுடன் ஆறுமுகம் தாத்தா தான் எங்களை வளர்த்து ஆளாக்கினார். அவரை எங்களால் மறக்கவே முடியாது.
எனவே எங்கள் குடும்பத்தின் ஆண் தேவதை எங்கள் ஆறுமுகம் தாத்தா தான். அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் கடந்து வந்த பாதையை எப்போது மறக்க மாட்டேன்' என்று சுஜா வருனே கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments