சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு: தினேஷ் கார்த்திக்
Send us your feedback to audioarticles@vaarta.com
இலங்கையில் நடந்த மூன்று நாடுகள் டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த தினேஷ் கார்த்திக், ஒரே நாளில் இந்தியாவின் ஹீரோவாக மாறிவிட்டார். இந்த சந்தோஷத்தில் அவர் இருந்தாலும் அவருக்கும் ஒரு குறை பல ஆண்டுகளாக இருக்கின்றதாம், அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது. தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்கும் தினேஷ், இதுகுறித்து கூறியதாவது:
நான் என் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாடு அணிக்காகத்தான் ஆடியுள்ளேன். வேறு எந்த மாநிலத்திற்காகவும் ஆடவில்லை. எனது நீண்ட நாள் கனவு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடவேண்டும் என்பது. ஆனால் அது எனது கையிலோ அல்லது அணியின் கையிலோ இல்லை. ஏலம் எடுக்கும் போது ஒவ்வொரு அணி உரிமையாளரும் அந்த நேரத்தில் எடுக்கும் முடிவு அது. ஒரு அணி இந்த வீரரைத்தான் ஏலம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏலத்திற்கு வருவதில்லை.
இது எனக்கு மட்டுமில்லை, பல பேர்களுக்கு ஏற்படும் வருத்தம். டெல்லி வீரர் மும்பை அணியிலும் மும்பை வீரர் சென்னை அணியிலும் விளையாடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல் போட்டியின் பியூட்டியே இதுதான் என்றும் சொல்லலாம் என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments