"என் தம்பி ஸ்டாலின்".....மனதார வாழ்த்திய அண்ணார் அழகிரி... நடந்தது என்ன....?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க இருக்கும் முக.ஸ்டாலின் அவர்களுக்கு, அவரது சகோதரர் முக.அழகிரி மனதார வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலைஞரின் அரசியல் வாரிசுகளான முக.அழகிரி மற்றும் முக.ஸ்டாலின் அரசியிலில் திளைத்து வந்தாலும், சகோதரர்களுக்குள் சலசலப்புகள் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. அந்த வகையில் ஸ்டாலினை விமர்சித்த அழகிரி, ஒருசில இடங்களில் காரசாரமாக பேசி வந்தார். தம்பியை எதிர்த்து கட்சி துவங்க வைக்க, ஸ்டாலினின் எதிரிகள் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரையிலும் இதுகுறித்து அறிவிப்புகள் எதையும் அழகிரி வெளியிடவில்லை.
குடும்ப உறுப்பினர்கள் ஸ்டாலினுக்காக அழகிரியிடமும், அழகிரிக்காக ஸ்டாலினிடமும் சமரசம் செய்து வந்தார்கள். இதன் பலன் தான் அழகிரி கட்சி துவங்கும் முயற்சியை கைவிட்டுவிட்டார். இதையடுத்து பேட்டி ஒன்றில் ஸ்டாலினிடம் அழகிரி குறித்து கேட்டபோது, "அவர் என் அண்ணன்" என கூறியிருந்தார். இவரது பதில் பலர் மத்தியில் கவனம் பெற்றது.
இந்த நிலையில் முக.ஸ்டாலின் நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். வட மாநில தலைவர்கள், தமிழக அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஸ்டாலினை நேரில் சந்தித்தும், அறிக்கைகள் அனுப்பியும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அவரது அண்ணார் முக.அழகிரி கூறியிருப்பதாவது,
"“முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். என் தம்பி பதவியேற்பதில் பெருமை அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments