இச்சைக்காக காம கொடூரனான, காமர்ஸ் வாத்தியார், ....! 500க்கும் மேல் வந்து குவியும் புகார்கள்...!

ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜன் உள்ளிட்டோர் வரிசையில், ஆசிரியர் ஆனந்த்-ம் இணைந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக ஆசிரியர்கள், மாணவிகளுக்கு செய்யும் பாலியல் துன்புறுத்தல் குறித்த செய்திகள் சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பேசுபொருளாளாக மாறியுள்ளது. அந்த வகையில் மகரிஷி பள்ளியின் ஆசிரியர் ஆனந்த் மீது 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை, சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன். இவரின் பாலியல் சீண்டல்கள் குறித்து முன்னாள் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்களை ஷேர் செய்திருந்தார். இப்பிரச்சனை தான் தற்போது சமூகவலைத்தளங்களில் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

காமர்ஸ் வாத்தியார் ஆனந்தன் கடந்த பல வருடங்களாகவே மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்களை செய்து வந்துள்ளார். அவர்களிடம் தொட்டுத்தொட்டு பேசுவது, முத்தம் கொடுப்பது, மடியில் வந்து அமரச் சொல்வது, அணைப்பது, எதிர்த்து பேசினால் அவர்களை மிரட்டுவது என பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான். இதனால் மாணவிகள் இணைந்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் இவரை கண்டித்து, பணியிடைநீக்கம் செய்யதுள்ளது. ஆனால் முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆனந்தனை வேலை நீக்கம் செய்யவேண்டும் என்றும், பிற பள்ளிகளில் அவருக்கு வேலை தரக்கூடாது என்றும் காட்டமாக கூறப்பட்டுள்ளது.

ஆனந்தன் குறித்து பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் கூறியிருப்பதாவது, இந்த ஆசிரியர் முன்னாள் வேலை செய்த பள்ளியில், இந்த மாதிரி பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுத்தான் டிஸ்மிஸ் ஆனார். அதை மகரிஷி பள்ளியிலும் தொடர்ந்துள்ளார். கடந்த பல வருடங்களாக மாணவிகளை வற்புறுத்தி முத்தம் கொடுப்பது, கட்டி அணைப்பது உள்ளிட்ட இச்சை செயல்பாடுகளை செய்து வந்துள்ளான். இது குறித்து கேட்டால் அப்பா மாதிரி என்று, அத்து மீறி நடந்துகொள்வான். ஆனந்த் முன்னாள் பணிபுரிந்த பள்ளிநிர்வாகம் தக்க தண்டனை கொடுத்திருந்தால், இப்போது இந்த மாதிரி கேவலமான செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டான்.

இவரை எதிர்த்து மாணவிகள் பேசினால், அவர்களை மற்றவர்கள் முன்பு அசிங்கப்படுத்தியும், அடித்து துன்புறுத்தியும் உள்ளார். தன் இச்சைக்கு இணங்காத மாணவிகளை பெயில் செய்து விடுவேன் என மிரட்டி, கெட்ட வார்த்தைகளில் வசைபாடியுள்ளார். யாரும் இல்லாத நேரத்தில் காலை 7 மணிக்கு, தனியாக ஒரு மாணவியை மட்டும் ஸ்பெஷல் கிளாஸ் என பொய் கூறி வரச்சொல்லியுள்ளார். காலையில் கிளாஸ் வந்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. யாரும் அந்த வகுப்பிற்கு வராததால் சந்தேகமடைந்துள்ளார் மாணவி. அப்போது அப்பெண்ணிடம் அத்துமீறி முத்தமிட்டுள்ளார், இதை தடுத்த மாணவி, பள்ளி நிவாகத்திடம் சென்று புகாரளித்துள்ளார். அப்போது மாணவி கூறுவது பொய் என்று மழுப்பி விட்டார். மேலும் அவரை 11-ஆம் வகுப்பில் பெயில்-ம் செய்து விட்டார்.

இதேபோல கோச்சிங் கிளாஸ் ஒன்றை நடத்தி வரும் ஆனந்தன், அங்குவரும் பெண்களிடமும் தனது சில்மிஷத்தை காட்டியுள்ளார். இவரை தட்டிக்கேட்க மற்றும் கண்காணிக்க, பள்ளி நிர்வாகம் சார்பாக யாரும் கவனம் கொள்ளவில்லை. இதனால் இவரின் அக்கிரமங்கள் தொடர்ந்துள்ளது என முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் பெற்றோர்களிடம் இருப்பதை விட, அதிக நேரம் பள்ளியில் ஆசிரியர்களுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய புனிதமான ஆசிரியர் பணியையே கொச்சைப்படுத்தும் அளவிற்கு, சில ஆசிரியர்கள் இன்னும் கேவலமாக,கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதையே பலரும் கருத்துக்களாக கூறிவருகின்றனர்.