கமல்ஹாசன் விளம்பர வீடியோவுக்கு வந்த சிக்கல்!
- IndiaGlitz, [Monday,April 15 2019]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது வாக்குறுதிகளை அளிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவற்றில் ஒன்றான கமல்ஹாசன் டிவியை உடைக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் உள்ள ஒருசில வார்த்தைகள் சர்ச்சைக்குரியதாக இருந்ததாக ஒருசிலர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக தற்போது இந்த வீடியோவில் ஒருசில வார்த்தை, சில இடங்களில் ஒருசில வரிகளின் ஒலி நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரச்சாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும்.
நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே மாண்பு தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க விடுவோம். இன்று ஆள்வோருக்கு அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின் சோகம். அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள்
நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே மாண்பு தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க விடுவோம். இன்று ஆள்வோருக்கு அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின் சோகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 15, 2019
அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள்.(2/2)