முத்துக்குமார் நீக்கம்.. பிக்பாஸ் போட்ட உத்தரவால் பரபரப்பு..

  • IndiaGlitz, [Wednesday,October 23 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே மேனேஜராக இருந்த பவித்ரா ஜனனி நீக்கப்பட்டு, முத்துக்குமார் மேனேஜராக இருக்கும் நிலையில், தற்போது அவரும் நீக்கப்பட்டுவிட்டதாக பிக் பாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் மேனேஜர் பொறுப்பேற்ற முத்துக்குமார் மீது குற்றச்சாட்டுகள் சரமாரியாக எழுந்து வருகிறது. ஸ்டார் ஹோட்டலில் தங்க வந்த கஸ்டமர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என பிக் பாஸ் கூற, முதலில் வந்த சுனிதா, கோ ஆர்டினேஷன் ரொம்ப கம்மியா இருக்குது, மேலும், ஹோட்டல் நிர்வாகிகள் ரொம்ப பொய் சொல்றாங்க, என்றும் தெரிவித்தார். ஹோட்டலில் சுத்தம் சரியாக இல்லை என்று தர்ஷிதா கூறிய போது, சாச்சனா சிரிக்க, பார்த்தீங்களா? நீங்களே சிரிக்கிறீர்கள், என்று தர்ஷிதா குற்றம் காட்டினார்.

நீச்சல் குளம் அருகே உள்ள பவுண்டேஷனில் கஸ்டமர் கேர் துணி துவைக்கிறார்கள்; அதைக் கூட சரியாக கவனிக்கவில்லை ஹோட்டல் நிர்வாகம், என்று ஆர்.ஜே. ஆனந்தி குற்றம் சுமத்தினார்.

கூப்பிட்ட நேரத்தில் எல்லாரையும் மேனேஜரால் ஹேண்டில் பண்ண முடியவில்லை, என்று செளந்தர்யா கூற, கஸ்டமர்களை புரிந்து கொள்வதற்கு எனக்கு சில நேரம் எடுத்தது, என்று முத்துக்குமார் விளக்கம் அளிக்கிறார். இதனை அடுத்து பிக் பாஸ் ’ஹோட்டல் நிர்வாகம் மேனேஜரை மாத்தி விட்டு புது மேனேஜரை அப்பாயின்மென்ட் செய்யலாம், என்று கூற ’வேண்டுமென்றே பண்ணிட்டாங்க, என்று முத்துக்குமார் புலம்புவதுடன் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

More News

தமிழை பத்தி தப்பா பேசாதே.. ரியாலிட்டி ஷோவில் பொங்கி எழுந்த மலையாள நடிகர்..!

தமிழைப் பற்றி தப்பா பேசாதே என மலையாள நடிகர் ஒருவர் ரியாலிட்டி ஷோவில் பொங்கி எழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக மாநாட்டில் விஜய் எத்தனை மணி நேரம் பேசுவார்.. ஆச்சரிய தகவல்..

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் எத்தனை மணி

அன்ஷிதாவை பாட்டியாக்கிய பிக்பாஸ்.. ஜெஃப்ரி தான் பேரன்.. சூடு பிடிக்கும் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 17 வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த வாரம் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும்,

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. மேனேஜரை மாற்றிய பிக்பாஸ்.. என்ன நடந்தது?

பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில், பவித்ரா ஜனனி மேனேஜராக இருந்து வரும் நிலையில், அவரை மாற்ற வேண்டும் என்ற அடுக்கடுக்கான புகார்கள் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்ப தெரியுதா? நான் ஏன் அவரை விடலைன்னு.. சூர்யாவுக்கு அஜித் சொன்ன ரகசியம்..!

நடிகர் அஜித்தை தான் சமீபத்தில் சந்தித்ததாகவும், அப்போது அவர், "இப்போ தெரியுதா, நான் ஏன் அவரை விடவில்லை என்று?" என்று அஜித் தன்னிடம் கூறியதாகவும் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.