மீனாவை வீட்டை விட்டு வெளியேற்றிய முத்து.. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் திடீர் திருப்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியலுக்கு மிகக் குறைந்த நாட்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முத்துவின் சகோதரர் ரவி - ஸ்ருதி திருமணத்தால் அண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு காரணம் மீனாதான் என்று ஒட்டுமொத்த குடும்பமே அவர் மீது பழி போடுகிறது. மீனாவின் கணவர் முத்துவும் அவர் மீது கோபப்பட்டு அவரை அடித்து வெளியே போகச் சொல்லுகிறார்.
இந்த நிலையில் ரவி - ஸ்ருதி வந்தால் மட்டுமே அண்ணாமலையை சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியும் என்ற நிலையில் மீனா விடாமல் ரவியை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் ரவி தொடர்பு கொள்ளும் அவர் உடனடியாக வர சொல்கிறார், ஆனால் ரவி வர மறுக்கவே, நான் செத்தால் நீங்கள் வந்து தானே ஆக வேண்டும் என்று சொன்னவுடன் ரவி அதிர்ச்சி அடைந்து உடனே ஸ்ருதியுடன் வருகிறார்.
ரவியை பார்த்ததும் முத்து, ரவியை அடிக்க, அப்போது ஸ்ருதி, காவல்துறை அதிகாரியிடம் ’நாங்கள் இருவரும் மேஜர், நாங்கள் விரும்பி தான் திருமணம் செய்து கொண்டோம், நான் என் பெற்றோருடன் செல்ல மாட்டேன், ரவியுடன் தான் செல்வேன் என்று கூறியவுடன் அண்ணாமலையை காவல்துறை அதிகாரி விடுதலை செய்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை குடும்பத்தினர் காவல் நிலையத்திலிருந்து வீடு செல்லும் போது மீனாவும் பின்னாடியே வர, 'நீ இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது என்று முத்து மீனாவை விரட்டி அடிக்கிறார். மீனாவுக்கு இதனால் மிகப்பெரிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com