சிறகடிக்க ஆசை: மீண்டும் முத்து-மீனா சண்டை.. இந்த முறை தவறு மீனாவிடம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக முத்து-மீனா ஆகிய இருவரும் ரொமான்ஸ் செய்து வந்தனர் என்பதும் தங்களது கருத்து வேறுபாடு, சண்டைகளை மறந்து சந்தோசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் பார்த்து வந்தோம்.
ஆனால் திடீரென தற்போது முத்து - மீனா இடையே சண்டை வந்துள்ள காட்சிகள் இன்று ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் இனி மேலும் சண்டை வலுக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த சண்டைக்கு மீனாவின் புரியாமை தான் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
முத்துவின் அம்மாவிடம் பணத்தை பறித்தது மீனாவின் தம்பி சத்யா தான் என்பது முத்துக்கு தெரிய வருகிறது. இதை சத்யாவின் வீட்டில் போய் சொல்லலாம் என்று முத்து போக,சத்யா மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக அவருடைய அம்மா நெகிழ்ச்சியுடன் சொன்னதை அடுத்து முத்து அவரிடம் எதுவும் சொல்லாமலே திரும்பி விட்டார்.
இதையடுத்து மருத்துவமனையில் சென்று சத்யாவை முத்து பார்க்க சென்றபோது முத்துவிடம் சத்யா திமிராக பேசியது மட்டுமின்றி தான் திருடி அது சரிதான் என்றும் உங்கள் அம்மா என்னை அவமானப்படுத்தி விட்டார், அதனால் தான் நான் திருடினேன், அதற்கு பதிலாக நீங்கள் என் கையை உடைத்து விட்டீர்கள், சரியா போச்சு என்று திமிருடன் பேசியது முத்துவுக்கு மேலும் வேறு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் முத்து தான் தனது தம்பியை அடித்தது என்பது மீனாவுக்கு தெரிய வருகிறது. இதனை அடுத்து முத்துவிடம் சென்று ’என் தம்பியை ஏன் அடித்தீர்கள் என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். தன் தம்பி மீது என்ன தவறு என்பதை யோசிக்காமல் மீனா தனது கணவரிடம் சண்டை போட்டு வருவதை அடுத்து மீண்டும் இருவருக்கும் பிரிவு ஏற்படுமா? அல்லது மீனா தனது தம்பியின் தவறை உணர்ந்து தம்பியை திருத்த முயற்சிப்பாரா? முத்து சண்டையை ஏற்கனவே ரசித்து வரும் விஜயா, ரோகிணி, மற்றும் ஸ்ருதி மேலும் ரசிக்கும் வகையில் தீனி கிடைக்குமா? என்பதை எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com