அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து என் அம்மாவிடமே பேசினார்கள்.. 'முத்தழகு' சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘முத்தழகு’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தனது அம்மாவிடமே பேசினார்கள் என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘முத்தழகு’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சம்யுக்தா தன்னிடம் சின்னத்திரையில் யாரும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியதில்லை, ஆனால் அதே நேரத்தில் தனக்கு மூன்று திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது, அந்த திரைப்படங்களில் நேரடியாகவே அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியதால் முடியாது என்று கூறிவிட்டு அந்த படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.
மேலும் ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அந்த படத்தின் குழுவினர்களில் ஒருவர் என்னுடைய அம்மாவிடம் சம்பளம் உள்ளிட்ட தகவலை பேசிய பின்னர் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு வரவேண்டும் என்று கூறியதை அடுத்து என் அம்மாவே உங்கள் படத்தில் என் மகள் நடிக்க மாட்டார் என்று கூறி என் போனை வைத்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை சம்யுக்தா ’சிப்பிக்குள் முத்து’ என்ற தொடரில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் ஆன ஒரு சில மாதத்தில் அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் என்பதும் இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout