மகன் ஹீரோவாகும் படத்தில் பிரபல ஹீரோ வில்லன்.. இயக்குனர் முத்தையாவின் வேற லெவல் சம்பவம்..!

  • IndiaGlitz, [Sunday,March 10 2024]

பிரபல இயக்குனர் முத்தையா தனது மகனை ஹீரோவாக்கி இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் பிரபல ஹீரோவை வில்லன் ஆக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் கடந்த பிப்ரவரி மாதம் பூஜை நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய் முத்தையா ஜோடியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வரும் நிலையில் கிராமத்து பின்னணியில் ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் கலந்த படமாக இந்த படம் உருவாகி வருகிறது

கே.கே.ஆர் சினிமா சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரபல ஹீரோவாக இருந்த பரத் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பல படங்களில் ஹீரோவாக பரத் நடித்திருந்தாலும் சில படங்களில் வில்லனாக நடித்த நிலையில் தற்போது அவர் மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.