1947 லிலேயே முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

  • IndiaGlitz, [Friday,February 21 2020]

பா.ஜ.க. வின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சருமான கிரிராஜ் சிங் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். இப்போது, முஸ்லீம்களை 1947 லேயே பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தவறு செய்து விட்டார்கள் என்று மதப் பின்னணியில் கருத்துக்களைக் கூறிக் மீண்டும் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

பாகிஸ்தான், வங்காளம், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தத்தில் முஸ்லீம்களின் நிலைமை மட்டும் கேள்விக்குறியாகி இருப்பதாக பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் கூறிய கருத்து கடும் விவாதத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

புதன்கிழமையன்று, பீகார் மாநிலத்தின் பூர்ணியா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிரிராஜ் “தேசத்திற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டிய நேரம் இது. 1947 க்கு முன்பு ஜின்னா இஸ்லாமிய நாடு வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, நமது முன்னோர்கள் செய்த பெரும் தவறால் அதற்கான பலனை தற்போது நாம் அனுபவிக்கிறோம்.

அப்போது, முஸ்லிம் சகோதரர்கள் அந்த நாட்டிற்கும், இந்துக்கள் நம் நாட்டிற்கும் அனுப்பப் பட்டிருந்தால், நாம் தற்போது இந்த நிலைமையில் இருந்திருக்க மாட்டோம்” எனப் பேசியிருக்கிறார்.

நான்கு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், உத்திர பிரதேசத்தில் உள்ள “இஸ்லாமிய செமினரி தியோபந்த் ஒரு பயங்கரவாதத்தின் நீரூற்று” எனப் பேசியிருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இது குறித்து விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியிருந்தார். இந்த சம்மனுக்கு பின்பு தான் இந்நிகழ்வு நடந்திருக்கிறது.

அமைச்சர் கிரிராஜ் சிங் முன்னதாக, நாட்டில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால்தான் ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது, இந்தியனா இருந்தா மாட்டுக்கறி சாப்பிடாதீங்க... போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

பாகிஸ்தான் ஜிந்தாபாத் - CAA க்கு எதிரான பேரணியில் முழக்கம் எழுப்பிய இளம் பெண் கைது

நாடு முழுவதும் இந்தியக் குடியுரிமைச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) க்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீரெட்டி கைது செய்யப்படுவாரா? தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

தெலுங்கு திரை உலகின் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் பலர் மீது பாலியல் புகார் கொடுத்து

எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்: அனுஷ்கா வேதனை

ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அனுஷ்கா  ஷெட்டி. பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய படங்களில் நடித்த பின்னர் அவர் உலகப் புகழ் பெற்றார்

'அட்டக்கத்தி' தினேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

அட்டக்கத்தி தினேஷ் நடித்த 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது 'வாராயோ வெண்ணிலவே',

மதுரையில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி – ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக மதுரை