பிரதமர் மோடியுடன் பேசிய முஸ்லீம் இளைஞர்....! வைரலாகும் புகைப்படம்...!
- IndiaGlitz, [Monday,April 12 2021]
மேற்குவங்கத்தில் தேர்தல் நடக்கவிருப்பதால், பிரதமர் மோடி கடந்த 2-ஆம் தேதி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
மேற்குவங்கத்தில் சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருப்பதால், சோனார்பூர் பகுதியில் மோடி அவர்கள் பிரச்சாரம் செய்தார். அப்போது மோடியிடம் முஸ்லீம் இளைஞர் ஒருவர் எதையோ கேட்க, அவர் தோலை அனைத்து கூர்ந்து கவனித்து கேட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
மோடியிடம் இளைஞர் பேசியது குறித்து இணையத்தில் விமர்சனங்கள் பரவலாக வந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் ஒவைசி எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது, மேற்கு வங்க தேர்தலுக்காக பாஜக நாடகம் நடத்துகிறது, அந்த இளைஞர் முஸ்லீம் கிடையாது என பேசியிருந்தார். இந்தநிலையில் நிருபவர்கள் அந்த இளைஞரை கண்டுபிடித்து விசாரித்ததில், கொல்கத்தாவின் மீடியாபுரூஸ் பகுதியை சேர்ந்த ஜுல்பிகர் அலி (38) தான் அவர் என அறியப்பட்டுள்ளது.
நிருபர்களிடம் ஜுல்பிகர் அலி பேசியதாவது,
சோனார்பூரில் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, அவரிடம் 40 வினாடிகள் மட்டும் தான் பேசினேன். என் பெயரை கேட்டுக்கொண்ட மோடி அவர்கள், உங்களுக்கு ஏதாவது வேண்டுமா எனக்கேட்டார். நான் கவுன்சிலர், எம்எல்ஏ சீட் எனக்கு வேண்டாம், உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் என் பேராசை என்று கூறினேன். அவர் உடனே புகைப்பட நிபுணரை அழைத்து, என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வை நான் மறக்கவே மாட்டேன்.
கடந்த 2014 முதல் பாஜகவில் உள்ள நான் தெற்கு கொல்கத்தா மாவட்டத்தின் தலைவராக உள்ளேன். ராணுவத்தில் சேவையாற்ற நினைத்த நான், அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.