திருப்பதி கோவிலுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கான தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய தம்பதி கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் ஒரு கோடியே 2 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர். சென்னையை சேர்ந்த சுபினா பானு மற்றும் அப்துல் கனி என்ற தம்பதி சமீபத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டனர.
அதன் பின்னர் அங்குள்ள தேவஸ்தான அதிகாரியை சந்தித்து 1.02 கோடி ரூபாய்க்கான காசோலையை நன்கொடையாக வழங்கினார்கள். இதில் 15 லட்ச ரூபாய் தினசரி அன்னதான திட்டத்திற்கும் 87 லட்ச ரூபாய் பத்மாவதி விருந்தினர் மாளிகையை புதுப்பிக்கும் பணிக்கும் பயன்படுத்த அவர்கள் நிர்வாக அதிகாரியை கேட்டுக்கொண்டனர்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு கோடிக்கு மேல் நன்கொடை வழங்கிய இஸ்லாமிய தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நெட்டிசன்கள் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இவர்களது நன்கொடை அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout