கட்டண சேவையாகிறது டுவிட்டர்: எலான் மஸ்க் அறிவிப்பு!
- IndiaGlitz, [Wednesday,May 04 2022]
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கிய நிலையில், டுவிட்டர் விரைவில் கட்டண சேவை ஆகும் என்று அவர் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சற்றுமுன் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ’வணிக மற்றும் அரசாங்க பயனாளிகளிடம் இருந்து சிறிதளவு கட்டணம் பெற திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் சாதாரண பயனர்களுக்கு டுவிட்டர் எப்போதும் இலவசமாகவே கிடைக்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தற்போது வணிக மற்றும் அரசாங்க பயனர்களிடம் இருந்து கட்டணம் பெறும் எலான் மஸ்க், விரைவில் சாதாரண பயனர்களிடம் இருந்தும் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நீக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் புதிய சிஇஓவாக வேறொருவரை அல்லது தன்னையே சிஇஓவாக நியமனம் செய்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு எடிட் பட்டன் உள்பட பல்வேறு வசதிகள் செய்து தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீரென அவர் கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Twitter will always be free for casual users, but maybe a slight cost for commercial/government users
— Elon Musk (@elonmusk) May 3, 2022