மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட எலான் மஸ்க்… காரணம் தெரியுமா?

ஆட்டோமெபைல் துறைக்குப் பெயர்போன ஐரோப்பாவில் எலான் மஸ்க் தனது புதிய தொழிற்சாலை ஒன்றை துவங்கியிருக்கிறார். இதற்கான துவக்க விழாவின்போது அவர் நடனம் ஆடிய வீடியோதான் தற்போது உலகம் முழுக்கவே வைரலாகி வருகிறது.

மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா மற்றும் விண்வெளித் துறை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்-X ஆகியவற்றிற்கு உரிமையாளரக இருந்துவரும் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தை உலகம் முழுக்க பரவலாக்கம் செய்வது குறித்த திட்டத்தைச் சமீபகாலமாக அமல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான ஜெர்மனி தலைநகர் பெர்லினில் டெஸ்லாவின் கார் தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவின்போது எலான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து நடனம் ஆடிய வீடியோ சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு சீனாவின் ஷாங்காய் நகரில் டெஸ்லா தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையைத் துவங்கியது. அதன் துவங்க விழாவிலும் எலான் மஸ்க் மகிழ்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். தற்போது ஜெர்மனியிலும் இதேபோன்ற நடனத்தை எலான் மஸ்க் ஆடிய நிலையில் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.