இனிமேல் பேச்சு இல்லை, வீச்சு தான்.. விஜய்யின் 'கோட்' பட பிரபலம்..!

  • IndiaGlitz, [Tuesday,February 06 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய பணியாற்றும் ஒருவர் இனிமேல் பேச்சு இல்லை, வீச்சு தான் என பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருவதாகவும் இன்றைய படப்பிடிப்பில் விஜய், சினேகா, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா செய்தியாளர்களிடம் ‘கோட்’ படம் பற்றிய அப்டேட் கேட்ட போது சிரித்துக் கொண்டே ’இந்த முறை தெளிவாக இருக்கிறேன், இனிமேல் பேச்சு இல்லை, வீச்சு தான் என்று கூறினார்.

மேலும் ’கோட்’ படம் நன்றாக எடுக்கப்பட்டு வருகிறது, நானும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார். இதனை அடுத்து ’கோட்’ படத்திற்கு அவர் அட்டகாசமான பாடல்களை கம்போஸ் செய்திருப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, கனிகா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

More News

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. முழு விவரங்கள்..!

கடந்த வாரம் ஓடிடியில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே வெளியான நிலையில் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

அஜித் செய்வது உதவி.. விஜய் செய்வது பப்ளிசிட்டி.. பெண் அரசியல்வாதி ஆவேசம்..!

அஜித் தான் செய்த உதவியை யாருக்கும் தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் உள்ளார் என்றும், ஆனால் விஜய் பப்ளிசிட்டிக்காக உதவி செய்து வருவதாகவும் பெண் அரசியல்வாதி வீரலட்சுமி

'லால் சலாம்' டிரைலர்.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு தெரிக்காதது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த ட்ரெய்லரை

பையன் சம்பாதிச்சா வீட்டுக்கு பெருமை, சாதிச்சா நாட்டுக்கு பெருமை.. 'லால் சலாம்' டிரைலர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய திரைப்படம்

திரைப்படங்களில் வசனம் பேசுவதும், மேடையில் அரசியல் பேசுவதும் ஒன்றல்ல.. விஜய் குறித்து பிரபல இயக்குனர்..!

திரைப்படங்களில் வசனம் பேசுவதும், அரசியல் மேடைகளில் பேசுவதும் ஒன்றல்ல என பிரபல இயக்குனர் ஒருவர் விஜய் அரசியல் கட்சி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்