சிபிராஜின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளரின் மகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிபிராஜ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளரின் மகன் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் சிபிராஜ் தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பாண்டியன் ஆதிமூலம் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.
சிபிராஜின் 20ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் சிபிராஜ் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
My Next is an intriguing action thriller!
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) February 13, 2022
#SR20 to be Prod by @BigPrintoffl & Dir by @iam_Pandiyan.
Welcoming Legendary Composer #Vidyasagar sir’s Son @Harsha1398 debuting as Music director in this film????#Sibiraj20 @pravethedop @BigPrintKarthik @DoneChannel1 @shiyamjack pic.twitter.com/SdYunlflZe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments