சிபிராஜின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளரின் மகன்!

  • IndiaGlitz, [Sunday,February 13 2022]

நடிகர் சிபிராஜ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளரின் மகன் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் சிபிராஜ் தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பாண்டியன் ஆதிமூலம் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சிபிராஜின் 20ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் சிபிராஜ் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

ரஜினி, கமல், விஜய்யை அடுத்து இந்த நடிகருக்கும் வில்லனாகும் விஜய்சேதுபதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோரது படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக

ஒத்திவைக்கப்பட்ட இயக்குனர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இசையமைப்பாளரின் ஸ்டுடியோவை திறந்து வைத்த சூர்யா: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் இசையமைப்பாளரும் பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷ் ஆரம்பித்த ஸ்டுடியோவை நடிகர் சூர்யா திறந்து வைத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

திருமண மேடையில் உயிரிழந்த மணப்பெண்: பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!

திருமண மேடையிலேயே மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் மணப்பெண்ணின் பெற்றோர் அடுத்த நெகிழ்ச்சியான முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்யும் கிளென் மேக்ஸ்வெல்: தமிழில் திருமண பத்திரிகை!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருபவருமான கிளன் மேக்ஸ்வெல் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்