விஜய்சேதுபதி பட இசையமப்பாளருக்கு திருமணம்: வாழ்த்து கூறிய திரையுலகினர்!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

விஜய்சேதுபதி நடித்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவருக்கு திருமணம் நடந்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சித்தார்த் விபின். அதன் பின்னர் ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ’வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ’நவரசதிலகம்’ ’காஷ்மோரா’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார்

இந்தநிலையில் சித்தார்த் விபின் மற்றும் ஸ்ரேயா திருமணம் சமீபத்தில் கேரளாவில் மிகவும் சிறப்பாக நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் ஏற்பாடு செய்த இந்த திருமணத்தில் சித்தார்த்தின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் நகுல் கலந்துகொண்டார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் வாழ்த்துக்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் சித்தார்த்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகை ஆஷ்னா ஜாவேரி தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த்தின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க எனது வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்