பிக்பாஸ் யாஷிகாவின் படத்தில் வில்லனாகும் பிரபல இசையமைப்பாளர்!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்க இருக்கும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக்பாஸ் யாஷிகா ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். புவன் என்பவர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில் யாஷிகா சப்-இன்ஸ்பெக்டராக நடிக்கிறார் என்பதும் முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் இந்த படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’சல்ஃபர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இயக்குனர் புவன் இது குறித்து கூறிய போது ’சித்தார்த் விபின் அவர்களைப் பார்த்தவுடனே அவர்தான் இந்த படத்தின் வில்லன் என்பதை நான் முடிவு செய்து விட்டேன் என்றும் கூறினார். மேலும் யாஷிகாவை இதுவரை கிளாமராக மட்டுமே பார்த்த ரசிகர்கள் வித்தியாசமான பொறுப்புள்ள ஒரு காவல்துறை அதிகாரியாக பார்ப்பார்கள் என்று கூறினார்.

கண்ட்ரோல் ரூமில் இருந்து வரும் ஒரு அழைப்பு மூலம் கடத்தல் வழக்கு ஒன்றை யாஷிகா கண்டுபிடிப்பது தன் இந்த படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் தொடங்க இருப்பதாகவும் தொடர்ச்சியாக 50 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்பட பல பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் இயக்குனர் புவன் கூறியுள்ளார்.

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இந்த மாஸ் நடிகர் வில்லனா? 

பிரபல நடிகர்கள் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, வினய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஹீரோக்கள் வில்லனாக

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த கமல், ரஜினி பட நாயகி!

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது கமல் ரஜினி உள்பட பல முன்னணி

அகில இந்திய அளவில் அஜித்துக்கு கிடைத்த பெருமை: கொண்டாடும் ரசிகர்கள்

தல அஜித் நடிகராக மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்ட பல துறைகளில் தனது முத்திரையை பதித்து இருக்கிறார் என்று அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்திருக்கிறோம்.

மீண்டும் பாடகராக மாறிய தமிழ் ஹீரோ: வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் இளம் ஹீரோக்களில் ஒருவர் நகுல் என்பதும் இவர் நடிகர் மட்டுமின்றி ஒரு பாடகர் என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே 'அந்நியன்' 'கஜினி' 'வேட்டையாடு விளையாடு' 'வல்லவன்' 'கந்தகோட்டை' உள்பட பல

விஷ்ணுவிஷாலின் 'மோகன்தாஸ்' படத்தில் இணைந்த பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'காடன்' மற்றும் 'எப்.ஐ.ஆர்' ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் சமீபத்தில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான 'மோகன்தாஸ்