பிரபல இளம் இசையமைப்பாளருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,August 01 2019]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாக இளம் இசையமைப்பாளர்களின் அறிமுகம் அதிகமாகி, இசையுலகில் வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு 'வாயை மூடி பேசவும்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'சதுரங்க வேட்டை', 'முண்டாசுப்பட்டி', 'ஜோக்கர்', 'பா.பாண்டி', 'விஐபி 2', 'மெஹந்தி சர்க்கஸ்' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் சீன்ரோல்டன்.

இவர் இந்த ஆண்டு இசையமைத்த 'ராட்சசி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சீன்ரோல்டன் - சுதா தம்பதியினர்களுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சீன்ரோல்டன் வீட்டிற்கு வந்த புதுவரவான குட்டி தேவதைக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ராஜூமுருகன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'இசைத் தோழன் ஷான் ரோல்டன் - சுதா இணையருக்கு குட்டி ஏஞ்சல் வந்திருக்கிறாள். வாழ்த்துகள் ஷானப்பா' என்று தெரிவித்துள்ளார். அவருக்கு சீன்ரோல்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

More News

'நேர் கொண்ட பார்வை' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போனிகபூர்

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 8 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டும்

ரஜினி, விஜய் ரசிகர்களின் கொந்தளிப்பால் வருத்தம் தெரிவித்த பிரபல இயக்குனர் 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டது இந்திய அளவில் டிரெண்ட் ஆன நிலையில் இன்று ரஜினி, விஜய் ரசிகர்கள் இணைந்து இயக்குனர் ராஜூ முருகனை

தனுஷ் படத்தில் நடிப்பது உண்மையா? ஹிருத்திக் ரோஷன் விளக்கம்

நடிகர் தனுஷ் தற்போது 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் விரைவில் ஆனந்த் ராய் இயக்கத்தில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக

ரெண்டு பேரும் என்னை வேற மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க: கவின் வருத்தம்

சாக்சியுடன் காதல் பிரேக் அப், லாஸ்லியாவுடன் புதுக்காதல் என கவினின் காதல் இரட்டை வேடம் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களே கவினை நேருக்கு நேர் எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர்.

மீண்டும் இணைகிறதா 'வேலாயுதம்' கூட்டணி?

கடந்த 2011ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த 'வேலாயுதம்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக விஜய் நடிக்கவிருக்கும்