இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள்.. ப்ரியா மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்களை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கு சமீபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட தவறு காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டது என்பதை நேற்று பார்த்தோம்.
ப்ரியாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய நிலையில் திரையுலக பிரபலங்களும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் மரணம் குறித்து கூறியிருப்பதாவது:
“என் Game என்னை விட்டு போகாது, Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள், அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை’ என்று பதிவு செய்துள்ளார்.
“என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன்.
— G.V.Prakash Kumar (@gvprakash) November 15, 2022
இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com