ஆரி வேற மாறி… பிக்பாஸ் ஆரிக்காக ஒரு பாடல்… நட்பு ரீதியில் வெளியான அசத்தல் டிராக்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் சி.சத்யா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் ஆரிக்காக ஒரு லிரிக்கல் இசை ஆல்பத்தை வெளியிட்டு உள்ளார். இவர் ஆரி நடித்த “நெடுஞ்சாலை” “உன்னோடு கா” படத்திற்கும் இசையமைத்தவர். தற்போது இந்தக் கூட்டணி “அலேகா“ படத்திலும் தொடருகிறது. இந்நிலையில் நட்பு அடிப்படையில் சி.சத்யா “ஆரி வேற மாறி“ என்ற பாடலை இசையமைத்து நேற்று வெளியிட்டு உள்ளார்.
“தனியொரு ஆளாய் சென்றாய் அங்கே, தனக்கொரு பேரை வென்றாய் இங்கே..“ எனத் தொடங்கும் அந்தப் பாடல் “நேர்மை என்றால் ஆரி, உனை விரும்பும் நெஞ்சம் கோடி, மக்கள் இதயம் தேடி… நீ வருவாய் வாகைசூடி” என்ற ஹைலட்டோடு இருக்கிறது. மேலும் தனி ஒருவனாய், தன்னம்பிக்கை மிக்கவனாய், தன்னிலை மாறாதவனாய் என ஆரியின் பல குணங்களையும் இந்தப் பாடல் பிரதிபலித்து இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பிக்பாஸ் 4 ஆவது சீசன் தற்போது 100 ஆவது நாளை கடந்து உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் போட்டியில் 12 பேர் வெளியேறி உள்ளனர். தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, கேபி, சோம், ரம்யா ஆகிய 6 பேர் வீட்டில் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் ஆரிக்குத்தான் என பல ரசிர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். இத்தருணத்தில் ஆரிக்காக அவரது நண்பர்கள் ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டு இருப்பது மேலும் ரசிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments