'தல'க்கனம் இல்லாத 'தல அஜித்'. தேவா பாராட்டு

  • IndiaGlitz, [Friday,February 26 2016]

'தல' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்தின் நடிப்பை ரசித்து அவருக்கு ரசிகர்களாக மாறியவர்களை விட அவருடைய அன்புக்கும் குணத்திற்கும் கட்டுப்பட்டு ரசிகர்களாக மாறியவர்கள்தான் அதிகம் இருக்கும். அந்த அளவுக்கு மற்றவர்களிடம் அவர் காட்டும் நேசம், ரசிகர்களிடம் வைத்திருக்கும் பாசம் உண்மையானதாக இருந்து வருகிறது.


சமீபத்தில் நடிகர் ராதாரவி கூட தான் மற்ற எல்லா நடிகர்களையும் பெயர் சொல்லித்தான் அழைப்பேன் என்றும் அஜித்தை மட்டும் சார்' என்று மரியாதையுடன் அழைக்க ஒரே காரணம் அவருடைய சேவை செய்யும் மனப்பான்மை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களும் அஜித் குறித்து கூறிய ஒரு கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது. தேவா கூறியதாவது: தலக்கனமே இல்லாத ஒரு நடிகர் தல'தான். உலகம் முழுவதும் நான் இசைநிகழ்ச்சிகாக சுற்றுப்பயணம் செய்தபோது அஜித் மீது அவரது ரசிகர்கள் வெறித்தனமான அன்பு வைத்திருப்பதை நான் நேரில் பார்த்துள்ளேன். நான் நடத்திய பல இசை நிகழ்ச்சிகளில் ஏராளமான சீட்டுக்களில் அஜித் பாடலை பாடும்படி வேண்டுகோள் குவிந்துள்ளதை நான் பார்த்துள்ளேன்.

உலகம் முழுவதும் ரசிகர்கள் அவரது அன்புக்கு கட்டுப்பட்டுள்ளனர். அவரது அன்பும் சேவை செய்யும் மனப்பான்மைதான் அவரை இந்த அளவுக்கு பெரிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது' என்று கூறியுள்ளார்.

More News

இறுதிக்கட்ட பணியில் விஜய்யின் 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள தெறி' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும்...

அட்லியின் அடுத்த படத்தில் ஜீவா

ஜீவாவின் 25வது படமான 'போக்கிரி ராஜா' ரிலீஸுக்கு தயாராகி வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் அவர் நடித்து வரும் 'திருநாள்'...

இயக்குனராக மாறிய விஜய் ரசிகர்

இளையதளபதி விஜய்யின் பெயருக்கே ஒரு கிரேஸ் உண்டு என்பதை அவருடைய தந்தை எஸ்.ஏ.சி கூறியதை சற்று முன்னர் பார்த்தோம்...

அருள்நிதியின் 'ஆறாது சினம்'. ஒரு முன்னோட்டம்

கடந்த ஆண்டு அருள்நிதி நடித்த 'டிமாண்ட்டி காலனி' மற்றும் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது மட்டுமின்றி...

அதர்வாவின் 'கணிதன். ஒரு முன்னோட்டம்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த முரளியின் திரையுலக வாரிசான அதர்வா, கடந்த 2010ஆம்...