நடிகை ரம்பா குடும்பத்தை மகளுடன் சந்தித்த பிரபல இசையமைப்பாளர்!

தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா குடும்பத்தினர்களை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் தனது மகளுடன் சந்தித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 90 களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ரம்பா. கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பா, அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தனது மகளுடன், ரம்பா குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இரண்டு குடும்பத்தினரும் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ, அதில் சந்தோஷ் நாராயணன் மகள் தீ பாடிய பாடல் ஆகிய காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன.