இளம் இசையமைப்பாளர், பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்கிறாரா? வேகமாக பரவும் வதந்தி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் ஒருவர் பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரை உலகம் என்றாலே அதில் சம்பந்தப்பட்டவர்களின் திருமணம் மற்றும் காதல் குறித்த வதந்திகள் ஊடகங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவது வாடிக்கையாக உள்ளது.
சமீபத்தில் கூட விஷால், நடிகை லட்சுமிமேனனை திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் பரவி வருகிறது என்பதும் இதற்கு விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் பிரபல தொழில் அதிபர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மகளை திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த வதந்தி உண்மையாகுமா? அல்லது வதந்தியாகவே முடிந்து விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments