'காக்கா முட்டை' மணிகண்டனுடன் இணைந்த மிஷ்கின் இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Monday,November 02 2015]

கடந்த ஆயுத பூஜை தினத்தில் வெளியான 'நானும் ரெளடிதான்' படத்தின் சூப்பர் ஹிட், விஜய்சேதுபதி திரையுலக வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரே வெற்றியின் மூலம் அவர் முன்னணி நடிகர்களின் வரிசையில் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசியவிருது பெற்ற 'காக்கா முட்டை' படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு இசையமைக்க 'கே' தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இசையமைப்பாளர் 'கே' ஏற்கனவே மிஷ்கின் இயக்கிய 'முகமூடி', மற்றும் சமீபத்தில் வெளிவந்த 'கிருமி' உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர். தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டனின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக தான் அதிக சந்தோஷம் அடைந்ததாக இசையமைப்பாளர் 'கே' தெரிவித்துள்ளார்.

More News

எம்.ராஜேஷின் அடுத்த ஹீரோ பிரபல இசையமைப்பாளரா?

கோலிவுட் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் முன்னணி ஹீரோவாகவும், ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ், தொடர்ந்து 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்....

நடிகர் சங்கத்தின் தீபாவளி பரிசு. உறுப்பினர்கள் மகிழ்ச்சி

சமீபத்தில் நடிகர் சங்கத்தில் புதியதாக பதவியேற்ற நாசர், விஷால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ஆக்கபூர்வமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்....

ராசியான நடிகையுடன் கைகோர்க்கும் விஷால்

நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்ற நடிகர் விஷால்....

நடிகர் சங்கத்தின் ரூ.1.5 கோடி மதிப்பிலான வீட்டின் நிலை என்ன? புதிய நிர்வாகிகள் ஆய்வு

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் திரட்டப்பட்ட நிதிகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேள்வி எழுந்த நிலையில், தற்போது நடிகர் சங்கத்திற்காக ரூ.1.5 கோடியில் வாங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் நிலை குறித்து நடிகர் சங்கத்தில் புதியதாக பொறுப்பேற்ற நிர்

'மருது' படத்தில் இணைந்த இரு துருவங்கள்

நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்காக விஷால் மற்றும் ராதாரவி ஆகியோர் இரு துருவங்களாக செயல்பட்டதையும், தேர்தலின்போது ஒருவரையொருவர் தாக்கி பேசியதையும் பார்த்த போது இனிமேல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்பட்டது......