பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட அந்த வார்த்தை தவறு: ஜேம்ஸ் வசந்தன்
- IndiaGlitz, [Tuesday,January 19 2021]
பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி ஒரு வார்த்தை பயன்படுத்தப்பட்டதாகவும் அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்றும் அந்த வார்த்தை தவறு என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே பிரம்மாண்டமாக நடந்தது என்பதும் அதில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பிக்பாஸ் குறித்து அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்துவரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்திய ஒரு வார்த்தை தவறு என்று கூறியுள்ளார்
பிக்பாஸ் வீட்டில் பார்வையாளர்கள் அடிக்கடி கேட்ட இரண்டு வார்த்தைகள் குரூப்பிஸம் மற்றும் ஃபேவரிஸம். குரூப்பிஸம் என்ற வார்த்தையை முதன்முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி தான் பயன்படுத்தினார் என்பதும் இந்த வார்த்தையை கேட்டதும் ரியோ உள்பட ஒருசிலர் டென்ஷன் ஆவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதே போல் போட்டியாளர்கள் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை ஃபேவரிஸம். தங்களுக்கு பிடித்தவர்களை கேப்டன் ஆக்குவது, நாமினேட் செய்யாமல் இருப்பது உள்பட பல காரியங்களை செய்வதற்கு பெயர் ஃபேவரிஸம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஃபேவரிஸம் என்ற வார்த்தை குறித்து ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வாரத்தையான ஃபேவரிஸம் என்பது தவறு என்றும், இப்படி ஒரு வார்த்தையே ஆங்கிலத்தில் இல்லை என்றும், ஃபேவரிட்டிஸம் (Favouritism ) என்பதே சரியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்