ஆரியை சீண்டினவங்க எல்லாம் வெளியே போறாங்க: இசையமைப்பாளர் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஆரியை சீண்டியவர்கள் அடுத்தடுத்து வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்
முதலில் சம்யுக்தா, அதன் பிறகு அர்ச்சனா, தற்போது அனிதா ஆகிய மூவருமே ஆரியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து அவரிடம் சண்டை போட்டு வெளியே சென்றுள்ளார்கள் என்றும், வெளியே வந்தபின் அவர்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்திருப்பார்கள் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அனிதாவை நான் சிங்கப்பெண் என்று கூறியிருந்தேன். ஏனெனில் அவர் டாப்புள் கார்டை கைப்பற்றி இதுவரை யாரும் நாமினேட் செய்யாத சம்யுக்தாவை மிகச்சரியாக நாமினேட் செய்து வெளியேற்றினார். அதனால் அவரை நான் சிங்கப்பெண் என்று கூறினேன். ஆனால் அதே நேரத்தில் அவர் ஆரியிடம் நடந்து கொண்டது மிகவும் தவறு, அந்த ஒரு காரணத்தினால் தான் அவர் வெளியேறி இருக்கிறார் என்று கூறியுள்ளார்
மேலும் ஆரிக்கு எந்த அளவு சப்போர்ட் வெளியே இருக்கிறது என்பது உள்ளே இருக்கும் அவருக்கே தெரிந்திருக்காது என்றும், அவர் வெளியே வந்தவுடன் தான் அவருகே தெரியவரும் என்று கூறினார். அதேபோல் டைட்டில் வின்னர் ஆரி தான் என்பது பத்து வாரங்களுக்கு முன்னரே முடிவாகி விட்டது என்றும் மக்களின் சாய்ஸ் கண்டிப்பாக ஆரிதான் என்று கூறிய ஜேம்ஸ்வசந்தன், இரண்டாமிடம் மூன்றாமிடம் தான் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்
மேலும் இந்த வாரம் ஆஜித் வெளியேற வாய்ப்பு உள்ளது என்றும், ஆஜித் நல்ல சிங்கர் என்றாலும் இந்த மைண்ட்கேம் விளையாடும் அளவுக்கு அவருக்கு அனுபவம், வயது இல்லை என்றும் இருப்பினும் அவர் இத்தனை நாள் இருந்ததற்கு காரணம் அது அவருடைய திறமை கிடையாது என்றும் அவரை விட மிகவும் மோசமாக விளையாடி கொண்டிருக்கும் மற்றவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதால்தான் பார்வையாளர்கள் ஆஜித்தை விட்டு வைத்திருந்தார்கள் என்றும், அதனால் இந்த வாரம் ஆஜித் வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com