'அண்ணாத்த' படத்தில் இமான் அறிமுகம் செய்யும் மாற்றுத்திறனாளி பாடகர்: வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் பல புதிய பாடகர்களை திரையுலகில் அறிமுகம் செய்து வருகிறார் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை மிகச்சிறப்பாக பாடி சமூக வலைத்தளங்களில் வைரலான மாற்றுத்திறனாளி திருமூர்த்தி என்பவருக்கு திரைப்பட பாடல் பாடும் வாய்ப்பை கொடுத்து அவரை பிரபலமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வா சாமி’ என்ற பாடலிலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ’வா சாமி’ என்ற பாடலை நாங்கள் பதிவு செய்தோம். இந்த பாடலை முகேஷ் முகமது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி மற்றும் கீழக்கரை சம்சுதீன் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலில் சம்சுதீனை அறிமுகம் செய்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான ’அண்ணாத்த’ படத்தின் டீசரில் ’வா சாமி’ என்ற பாடலின் சில வரிகள் இருக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’வா சாமி’என்ற முழு பாடல் மிக விரைவில் வெளியாக உள்ளதை அடுத்து இந்த பாடல் குறித்த விவரங்களை பதிவு செய்துள்ள டி இமான், இந்த பாடலை பாடியவர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பல புதிய பாடகர்களை உருவாக்கிவரும் டி இமான் அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout