தமிழக அரசை கிண்டல் செய்த இசையமைப்பாளர் டி.இமான்
- IndiaGlitz, [Tuesday,January 23 2018]
கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் 100 படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இமான்100' என்ற நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இமான் கலந்து கொண்டு இந்த 100 படங்களிலும் தன்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.இமான் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'பணி முடிந்த பிறகும் மெட்ரோ ரயிலை இயக்காமல் ஜெயலலிதா வரட்டும் என்று நிறுத்தி வைத்திருந்தவர்கள், அறிவிக்கப்பட்ட விருதையா சீக்கிரமாக கொடுக்கப் போகிறார்கள்' என்று கிண்டலுடன் பேசினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'கும்கி' படத்திற்காக டி.இமானுக்கு 2017ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் விருது வழங்கப்படவில்லை. இதுகுறித்த கேள்விக்கே டி.இமான் மேற்கண்ட பதிலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் விருதை அறிவித்த ஒருசில நாட்களில் அந்த விருதை விருது பெற்றவருக்கு வழங்கிய தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014 வரை 6 ஆண்டுகளுக்கான அறிவிக்கப்பட்ட விருதுகளை எப்போது வழங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்