இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
- IndiaGlitz, [Thursday,July 16 2020]
இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனும் இயக்குனருமான ஹோமோ ஜோ காலமானார். காலமான ஹோமோ ஜோ, இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஹோமோ ஜோ அவர் இயக்கிய கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர், உட்பட பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
மேலும் ‘கற்க கசடற’ படத்துக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய இவர், ‘நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ், யாசின், திருப்பதி உட்பட பலர் நடித்துவந்தனர் என்பதும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஹோமோ ஜோ இன்று காலமானார். அவரை மறைவை அடுத்து திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.