கவர்னர் கையால் டாக்டர் பட்டம் பெற்ற இளம் இசையமைப்பாளர்.. குவியும் வாழ்த்துக்கள்..!
- IndiaGlitz, [Thursday,August 24 2023]
தமிழ் திரை உலகின் இளம் இசையமைப்பாளர் இன்று, கவர்னர் ஆர்.என் ரவி கையால் டாக்டர் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் திரை உலகின் இளம் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் விஷால் நடித்த ’ஆம்பள’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி அதன்பின் ’இன்று நேற்று நாளை’ ’தனி ஒருவன்’ ’அரண்மனை 2’ ’கத்தி சண்டை’ ’கலகலப்பு 2’ உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
அதுமட்டுமின்றி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி ’நட்பே துணை’ ’நான் சிரித்தால்’ ’சிவகுமாரின் சபதம்’ ’அன்பறிவு’ ’வீரன்’ ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது அவர் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இசை தொடர்பான ஆய்வுக்காக பிஹெச்டி முடித்த அவருக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ’சுதந்திரமான இசை கலைஞர்களுக்கான தொழில் முனைவு வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஐந்து ஆண்டுகள் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆய்வு செய்து தற்போது டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிக்கு தமிழக கவர்னர் டாக்டர் பட்டத்தை வழங்கினார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.