கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த மாணவி. உடனடியாக கூகுள்பே-வில் பணம் அனுப்பிய இசையமைப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி தேர்வு கட்டணம் கட்ட முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு உடனடியாக கூகுள்பே-வில் பணம் அனுப்பி பிரபல இசையமைப்பாளர் ஒருவர் உதவி செய்துள்ளார்.
தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் கும்பகோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹேம பிரியா என்பவர் BCA படித்துவரும் நிலையில் தேர்வு நெருங்கி விட்டதாகவும் ஆனால் அதற்கான கட்டணம் கட்ட தன்னிடம் பணம் இல்லை என்றும் தனக்கு உதவி செய்யும்படியும் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இடம் உதவி கோரினார்.
அவர் உதவி கோரிய அடுத்த சில நிமிடங்களில் ஜிவி பிரகாஷ், உடனடியாக கூகுள்பே மூலம் பணத்தை அனுப்பி விட்டு, ‘உங்கள் அக்கவுண்டில் பணம் அனுப்பிவிட்டேன் என்று ஜீவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி ஜிவி பிரகாஷுக்கு நன்றி தெரிவித்து தேர்வு எழுதப்போகும் தனக்கு வாழ்த்து கூறும்படி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஜிவி பிரகாஷுக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments