கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த மாணவி. உடனடியாக கூகுள்பே-வில் பணம் அனுப்பிய இசையமைப்பாளர்!

  • IndiaGlitz, [Monday,October 03 2022]

கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி தேர்வு கட்டணம் கட்ட முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு உடனடியாக கூகுள்பே-வில் பணம் அனுப்பி பிரபல இசையமைப்பாளர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் கும்பகோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹேம பிரியா என்பவர் BCA படித்துவரும் நிலையில் தேர்வு நெருங்கி விட்டதாகவும் ஆனால் அதற்கான கட்டணம் கட்ட தன்னிடம் பணம் இல்லை என்றும் தனக்கு உதவி செய்யும்படியும் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இடம் உதவி கோரினார்.

அவர் உதவி கோரிய அடுத்த சில நிமிடங்களில் ஜிவி பிரகாஷ், உடனடியாக கூகுள்பே மூலம் பணத்தை அனுப்பி விட்டு, ‘உங்கள் அக்கவுண்டில் பணம் அனுப்பிவிட்டேன் என்று ஜீவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி ஜிவி பிரகாஷுக்கு நன்றி தெரிவித்து தேர்வு எழுதப்போகும் தனக்கு வாழ்த்து கூறும்படி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஜிவி பிரகாஷுக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'பொன்னியின் செல்வன்' 3 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? 

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய

சிவகார்த்திகேயனின் செம டான்ஸ்: 'பிரின்ஸ்' புரமோ வீடியோ வைரல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

வந்து கொண்டிருக்கின்றேன், அதர்மத்தை சர்வநாசமாக்க: பிரபாஸின் 'ஆதிபுருஷ்' டீசர்!

பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்றான 'ஆதிபுருஷ்' மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள்

அஜித்தின் 'துணிவு' படத்தில் பிக்பாஸ் காதல் ஜோடியா?

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான 'சரவணன் மீனாட்சி' நடிகை: சீமந்த புகைப்படங்கள்!

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சீரியல் நடிகை கர்ப்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.