கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல இசையமைப்பாளர்!

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் 1000 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் சென்னையில் சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டு வருகின்றனர்

அந்த வகையில் தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இன்று கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து, இன்று நான் கொரோனா தடுப்பபூசி செலுத்தி கொண்டேன், அதேபோல் அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள் தாமதம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.